January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கைதிகள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு ‘கொவிட் தகவல் மையம்’அமைப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகள் தொடர்பான தகவல்களை  உறவினர்களுக்கு  வழங்க சிறப்பு கொவிட் தகவல் பிரிவு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து கைதிகள் பற்றிய தகவல்களையும் இந்த பிரிவின் மூலம் பெற முடியும் என்றும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.

சிறைச்சாலை ஆணையர் சந்தனா ஏகநாயக்க மேலும் கூறுகையில், சிறைச்சாலை தலைமையகத்தில் கொவிட் தகவல் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க கொரோனா தொற்றுக்குள்ளான கைதியின் தகவல்களை மாத்திரம் இந்த தகவல் பிரிவினூடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இதன்படி , சிறையில் இருக்கக்கூடிய கைதிகளின் குடும்பத்தினர் 011- 4677101 எனும் அலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் ஊடாக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்  என்றும் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.