பொது இடங்களில் முகக் கவசம் இன்றி இருப்போரை சுற்றிவளைத்து, கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் செல்லும் நடைமுறையை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வந்த கைது முறையை நிறுத்துமாறு விசேட சுற்றறிக்கை மூலம் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
முகக் கவசம் அணியாதவர்களைக் கைது செய்து, தூக்கிச் செல்லும் போது, பொலிஸ் அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இடத்திலும் கைது செய்யப்படும் சந்தேக நபர்களை ஒரே வாகனத்தில் கொண்டு செல்வதன் ஊடாக கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், முகக் கவசம் அணியாதவர்களை பாதுகாப்பான முறையில் கைது செய்து, தனியான வாகனங்களில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.