January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் இன்னும் சில வாரங்களுக்கு கொரோனாவின் தாக்கம் தொடரும்’: சுகாதாரத்துறை எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா பரவலின் தாக்கம் இன்னும் சில வாரங்களுக்கு தொடரும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்னும் சில வாரங்களின் பின்னரே கொரோனா பரவலின் சரிவை எதிர்பார்க்க முடியும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் நிலைமை கட்டுப்பாட்டை மீறாமல் தடுப்பதற்கான முயற்சியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளதாகவும், சுகாதார வழிகாட்டல்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலாம், இரண்டாம் கொரோனா அலைகளின் போது, வேறு நோய்களுடன் இருந்தவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தாலும், தற்போதைய உயிரிழப்புகள் கொரோனாவால் ஏற்படும் நியுமோனியா காரணமாகவே இடம்பெறுவதாகவும் டாக்டர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.