January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 100 வீடுகளுக்கு சேதம்; 11 ஆயிரம் பேர் பாதிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம், மண்மேடு சரிவு போன்ற அனர்த்தங்களினால் 100 க்கும் அதிகமான வீடுகள் முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக இதுவரையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கினிகத்தேன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மூவர், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

7 மாவட்டங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றதோடு, இன்று முதல் காலநிலை சீராகலாம் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.