July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு 5000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதி

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளை விநியோகிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரிசி, கோதுமை மா, பருப்பு உள்ளிட்ட 20 அத்தியாவசிய பொருட்களை கொண்ட 5000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதிகளே இவ்வாறு விநியோகிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக தெரிவு செய்யப்படும் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தப்படாத பிரதேசங்களில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் இந்த நிவாரணப் பொதிகளை விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.