July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்திற்கு வெளியிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானம்

இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மேல் மாகாணத்திற்கு வெளியிலும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேல் மாகாண மக்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதுடன், இதனை தொடர்ந்து கண்டி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அந்த திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த மாவட்டங்களில் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள தெரிவு செய்யப்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இது வரையில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 9 இலட்சத்து 25 ஆயிரம் பேருக்கு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அஸ்ரா செனகா தடுப்பூசியும், மற்றையவர்களுக்கு சீனாவினால் வழங்கப்பட்டட சீனோபார்ம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அஸ்ரா செனகா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் மூன்று இலட்சம் பேருக்கு இரண்டாம் கட்டமாக அந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன், மிகுதி 6 இலட்சம் பேர் வரையிலானோருக்கு செலுத்துவதற்கு அதே வகை தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் வேறு வகை தடுப்பூசியை செலுத்துவதா என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.