
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹசீமின் ஒத்துழைப்புடன் அடிப்படைவாதத்தை தூண்டும் விதமாக வகுப்புகளை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் மூதூர் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
38 வயதுடைய குறித்த சந்தேக நபர், சஹ்ரான் ஹசீமின் ஒத்துழைப்புடன் உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு 2018 ஆம் ஆண்டில் அடிப்படைவாதத்தை போதிக்கும் வகையிலான வகுப்புகளை நடத்தியுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.