மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடைகள் அமுலில் இருக்கும் காலத்தில் தனியார் மற்றும் அரச துறைகளில் தொழில்புரியும் தொழிலாளர்களின் போக்குவரத்துக்காக விசேட ரயில் சேவைகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆனால்,குறித்த ரயில்கள் துணை ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாது என்றும் பயணிகள் தங்களுடைய தொழில் நிறுவனங்களின் அடையாளத்திற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அடையாளத்தை நிரூபிக்க தேசிய அடையாள அட்டை மற்றும் பணியிடங்களில் தலைவரால் கையொப்பமிட்ட கடிதம் ஆகியவற்றை வழங்க முடியும் என்றும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ரயில் அட்டவணை பின்வருமாறு:
காலை நேரம்
கண்டி முதல் கொழும்பு கோட்டை – 01 (அதிகாலை 5.00 மணிக்கு புறப்படுகிறது)
மாஹோ முதல் கொழும்பு கோட்டை – 01 (அதிகாலை 4.45 மணிக்கு புறப்படுகிறது)
சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை – 01 (அதிகாலை 5.50 மணிக்கு புறப்படுகிறது)
பொலவத்த மற்றும் புத்தளம் இடையே சிறப்பு ரயில் – 01 (காலை 7.00 மணிக்கு புறப்படுகிறது)
பெலியத்த முதல் மருதானை வரை – 01 (அதிகாலை 4.30 மணிக்கு புறப்படுகிறது)
மாலை நேரம்
கொழும்பு கோட்டை முதல் கண்டி வரை – 01 (மாலை 5.45 மணிக்கு புறப்படுகிறது)
கொழும்பு கோட்டை முதல் மாகோ – 01 (மாலை 6.00 மணிக்கு புறப்படுகிறது)
கொழும்பு கோட்டை முதல் சிலாபம் வரை – 01 (மாலை 5.18 மணிக்கு புறப்படுகிறது)
புத்தளம் மற்றும் பொலவத்த இடையே சிறப்பு ரயில் – 01 (மாலை 4.00 மணிக்கு புறப்படுகிறது)
மருதானை முதல் பெலியத்த வரை – 01 (மாலை 4.40 மணிக்கு புறப்படுகிறது)