மே 18, 19, 20 ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற கூட்டங்கள் இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்தா யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனை தொடர்பான விவாதம் மே 19, 20 ஆகிய திகதிகளில் இடம்பெறும் என்றும் இதன்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
19 ஆம் திகதி காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனை தொடர்பான விவாதம், மறுநாள் 20 ஆம் திகதி காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை இடம்பெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.