
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறதாகவும், இச் செயலானது வெறுமனே கல்லிலான ஒரு தூபியை மட்டும் உடைக்கவில்லை மாறாக இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களை தகர்த்திருக்கிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மரணித்தவர்களின் நினைவு தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்ச கட்டம். இராணுவமும் பொலிஸும் அந்த இடத்திற்கு வந்த பார்வையிட்ட பின்னர் தான் இது இடம்பெற்றிருக்கிறது.
ஆனால் போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடை விதிக்க முடியாது. அந்த நினைவுகளை எந்த உத்தரவும் மழுங்கடிக்கவும் முடியாது. நாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்வோம்,எவராலும் அதனை தடுக்க முடியாதபடி செய்வோம் எனவும் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.