நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தொடர்ச்சியான ஆய்வுகளின் தரவுகள் வெளிப்படுத்துவதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் பணிப்பாளரான வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
மிக வேகமாக வைரஸ் தொற்று பரவிக்கொண்டுள்ள காரணத்தினால் அடுத்து வரும் வாரங்கள் மிக அவதானம் மிக்கதானது என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இப்போது பரவிக்கொண்டுள்ள வைரஸானது அதிக வீரியம் கொண்டுள்ள காரணத்தினால் மரணங்கள் அதிகரிக்கும் சாத்தியமே கூடுதலாக உள்ளது. எனவே மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம் எனவும் கூறியுள்ளார்.
இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுபட எமக்கு இருக்கும் ஒரே வழிமுறை தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதாகும். தொடர்ச்சியாக இதனை நாம் கூறி வருகின்றோம்.
மீண்டும் அதனையே கூற வேண்டியுள்ளது. மக்கள் தமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுங்கள். அதுவே உங்களின் உயிரை பாதுகாக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.