May 25, 2025 7:46:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சிலோன் தேயிலை’ எனக் கூறி ஏற்றுமதி செய்ய முயன்ற 9 பில்லியன் பெறுமதியான சிகரெட் தொகை மீட்பு

‘சிலோன் தேயிலை’ எனக் கூறி ஏற்றுமதி செய்யப்பட இருந்த 9 பில்லியன் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுக்களை இலங்கை சுங்கத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

தேயிலை எனக் கூறி ஏற்றுமதி செய்யப்பட இருந்த 21 கொள்கலன்களில் இந்த சிகரெட் தொகை கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சிகரெட் தொகை ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் வெளிநாடுகளுக்கு இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்ய முயற்சித்த போது, கைப்பற்றப்பட்டதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நெதர்லாந்து, ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த சிகரெட் தொகை இணையவழி வியாபாரம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட இருந்ததாகவும் சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

‘சிலோன் தேயிலை’ எனப் பொதியிடப்பட்ட 21 கொள்கலன்களில் 9 பில்லியன் பெறுமதியான 200 மில்லியன் சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.