November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கில் மேலும் 9 கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள் நிர்மாணம்

(file photo )

வடக்கு மாகாணத்தில் அறிகுறி இல்லாமல் கண்டறியப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை தங்க வைப்பதற்கு 9 நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா 3 நிலையங்களும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒவ்வொரு நிலையங்களும் இயங்கவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் தனிமைப்படுத்தல் நிலையம் இயங்கி வருகின்றது.

அதேவேளை, வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையம் இராணுவத்தினரால் சுகாதார தரப்பினரிடம் கையளிக்கப்படவுள்ளது.

நாவற்குழி அரச உணவுக் களஞ்சியமும் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கிருஷ்ணபுரம், பாரதிபுரம் மற்றும் இயக்கச்சியில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பிலும் தனிமைப்படுத்தல் நிலையம் இயங்கி வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் பாடசாலை ஒன்று தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்பட்டு வருகின்றது. வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மத்திய நிலையம் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

இதுவும் இராணுவத்தினரால் சுகாதாரத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.