January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கொரோனா தொற்று பரவலின் ‘சிவப்பு பட்டியலில்’சேர்க்கப்படும்; அரச தாதியர் சங்கம்

இலங்கையில் தற்போது பதிவாகிவரும் தொற்று எண்ணிக்கை தரவுகளின் படி நாடு அடுத்த வாரத்திற்குள் கொரோனா தொற்று பரவலின் ‘சிவப்பு பட்டியலில்’ சேர்க்கப்படும் என்று அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றின் மிக மோசமான கட்டத்தை இலங்கை அடுத்த வாரத்திற்குள் அடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதிகளவான செல்வந்தர்களும் வெளிநாட்டு வர்த்தகர்கள், இரட்டை குடி உரிமை உடையவர்களும் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகழ்வு தகவல்கள் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றை தவிர, இந்தியாவில் பரவிவரும் அரிய வகை தொற்று நோயான மியூகோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோயும் பரவும் அபாயம் உள்ளது என்று அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய கூறினார்.