May 29, 2025 5:31:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் விமான நிலையங்கள் இயங்கும்’: சுற்றுலாத்துறை அமைச்சர்

இலங்கையில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் விமான நிலையங்கள் இயங்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.

வதுபிடிவல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையங்களை மூடுவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்களை மூடிவிடுவதால், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு வருவதற்கான வாய்ப்பை இழக்கக்கூடும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் விமான நிலையங்கள் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் இயங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.