May 28, 2025 15:36:18

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இஸ்ரேல்- பலஸ்தீன் போர் நிறுத்தத்துக்கு முன்வர வேண்டும்’: இலங்கை- பலஸ்தீன் நாடாளுமன்ற நட்புறவு சங்கம் அழைப்பு

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்துக்கு வர வேண்டும் என்று இலங்கை- பலஸ்தீன் நாடாளுமன்ற நட்புறவு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகளில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இலங்கை- பலஸ்தீன் நாடாளுமன்ற நட்புறவு சங்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

இரண்டு நாடுகளும் யுத்த நிறுத்தம் செய்து, பேச்சுவார்த்தைகளுக்கு முன்வர வேண்டும் என்றும் இலங்கை- பலஸ்தீன் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீனின் காஸா, மேற்குக் கரை மற்றும் ஜெருஸலம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்று வரும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் நட்புறவு சங்கத்தின் அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.