
இந்தியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையில் சமூகப் பரவல் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதார அமைச்சின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தீவிரமாகப் பரவும் பி.1.617 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நிலையில், மேலும் பலரும் அடையாளம் காணப்படாமல் இருக்க வாய்ப்புள்ளதாக சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் உருமாறிய கொரோனா பரவியுள்ள ஏனைய நாடுகளில் இலங்கைக்கு வந்தவர்கள் மூலம் இந்த வைரஸ் சமூகப் பரவல் நிலையை அடைந்திருக்கலாம் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வந்த அனைவரையும் புதிய வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனரா என்ற பரிசோதனைக்கு உட்படுத்துவதாகவும் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உருமாறிய 6 கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.