இலங்கையில் தடுப்பூசி அவசியமான அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தடுப்பூசி தேவைக்கு ஏற்ப எதிர்வரும் மாதங்களில் 2 ஆம் தொகை தடுப்பூசி கிடைக்கவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி 13 இலட்சமும், அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி 6 இலட்சமும் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.