photo: FaceBook/Kumanan Kana
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அங்கு புதிதாக கொண்டுவந்து வைக்கப்பட்டிருநந்த நினைவுக்கல் ஒன்றும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடுகை செய்வதற்காக பாரிய நினைவுக் கல்லொன்று நினைவேந்தல் நிகழ்வு குழுவினரால் நேற்று அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு அந்தக் கல் காணமல் போயுள்ளதுடன், அங்கிருந்த நினைவு முற்றமும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.