இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக சிறிய படகொன்றின் மூலம் மன்னார் பகுதிக்கு வந்து கொண்டிருந்த மூவரையும் இந்த கடத்தலுடன் தொடர்புடைய மேலும் 2 சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் பகுதியில் வசிப்பவர் எனவும், அண்மையில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அவர் விமானத்தில் சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த கடத்தலுடன் தொடர்புடைய ஏனைய நால்வரும் மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் கடற்படையினரால் அப்பகுதியின் பொது சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளால் கடல் வழியாக கொரோனா தொற்று நாட்டிற்குள் பரவுவதை தடுக்க கடற்படை தொடர்ந்து இலங்கை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.