
இந்திய கொரோனா வைரஸ் மற்றும் பிரித்தானிய கொரோனா வைரஸ் என இரு மாறுபட்ட வைரஸ்கள் நாட்டில் பரவிக்கொண்டுள்ள காரணத்தினால் நிலைமை மிக மோசமாகியுள்ளது.
எதிர்வரும் வாரங்களில் மிக மோசமான தாக்கங்களை தரவுகள் வெளிப்படுத்தும் என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ துறையின் பணிப்பாளரான வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
நாட்டில் தற்போது பாவனையில் இருக்கும் ஏதேனுமொரு தடுப்பூசியை பொதுமக்கள் உடனடியாக ஏற்றிக்கொள்வதே மிகச்சிறந்த பாதுகாப்பாகும் எனவும் அவர் வலியுறுத்துகின்றார்.
நாடளாவிய ரீதியில் கொவிட் -19 வைரஸ் பரவல் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் நாட்கள் மிகவும் அச்சுறுத்தலானவை.குறிப்பாக அடுத்த மாதம் மிக மோசமான பெறுபேறுகளை தரவுகள் காண்பிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே மக்கள் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அனாவசிய பயணங்கள், அனாவசிய ஒன்றுகூடல்கள், களியாட்டங்கள், நிகழ்வுகளை முழுமையாக தவிர்த்து கொள்ள வேண்டும். மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.எனவே மக்களின் நடமாட்டம் முடக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.