
இலங்கையில் எந்தவொரு பிரதேசத்திலும் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாமையினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதி நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உமா சபை அறிவித்தது.
ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், மேமன் ஹனபி பள்ளிவாசல் முக்கியஸ்தர்கள் என பலர் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இதன்போதே குறித்த தீர்மானம் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.