January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”சுகாதார நடைமுறைகளுடன் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு நடத்தப்படும்”: நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு தெரிவிப்பு

வடக்கு, கிழக்கில் இன்று முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளை சேர்ந்தோர் யாழ்ப்பாணத்தில் இன்று அஞ்சலி சுடர்களை ஏற்றி முள்ளிவாய்க்கால் வாரத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இம்முறை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறுமென ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு’ அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மே 18 காலை 10 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புகள், மத நிறுவனங்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஆகியோரை இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.