January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காலி மாவட்ட சுகாதார பரிசோதகர்களின் அடையாள பணி பகிஷ்கரிப்பால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்

காலி மாவட்ட சுகாதார பரிசோதகர்கள் இன்று அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

காலி மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் போது, பொது சுகாதார பரிசோதகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காததையிட்டு, இன்றைய தினம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படாததால் பொது மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக காலி மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் புலின ரனசிங்க தெரிவித்துள்ளார்.

பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், நோயாளர்களை தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவமனையில் அனுமதித்தல் போன்ற விடயங்களிலும் சிக்கல் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலி மாவட்ட மருத்துவர்கள் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், அவர்களின் குறைகளை தம் மீது திணிப்பதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.