February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையிலிருந்து 5 நாடுகளுக்கான பயணிகள் விமான சேவைகள் இடை நிறுத்தம்!

இன்று (புதன்கிழமை) அதி காலை முதல் இலங்கையிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த ஐந்து வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் மற்றும் ஷார்ஜா பிராந்தியங்களுக்கான விமான சேவைகளும், சிங்கப்பூர், இத்தாலி, பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகள் இன்று (புதன்கிழமை) அதிகாலை 00.00 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் இந்த நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவதற்கு பயணிகள் தொடர்ந்தும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதேவேளை பயணிகள் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள குறித்த ஐந்து நாடுகளுக்கும் சரக்கு விமான சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.