May 31, 2025 10:46:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ- சீன தூதுவர் ஷீ ஜன்ஹொங் சந்திப்பு

இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஜன்ஹொங் மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சீன தூதுவர் பிரதமர் மகிந்தவை இன்று அலரி மாளிகையில் சந்தித்தார்.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார நட்புறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

சீன ஜனாதிபதியின் வாழ்த்துக்களை சீன தூதுவர் பிரதமர் மகிந்தவுக்கு எத்திவைத்துள்ளார்.

இலங்கையின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ இதன்போது, எடுத்துக் கூறியுள்ளார்.

இலங்கைக்கு சீன தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.