May 26, 2025 2:51:43

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த குற்றக் கும்பல் சந்தேகநபர் ‘ஊரு ஜூவா’ துப்பாக்கி சூட்டில் மரணம்

பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த குற்றக் கும்பல் சந்தேகநபர் ‘ஊரு ஜூவா’ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

தினெத் மெலோன் மாபுல எலியாஸ் எனும் ‘ஊரு ஜூவா’ பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நவகமுவ பகுதியில் இடம்பெற்ற சம்பவமொன்றின் போது இவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை மேலதிக விசாரணைகளுக்காக நவகமுவ பகுதிக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு ஏற்பட்ட குழப்பத்துடன், பொலிஸார் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்துள்ளார்.

27 வயதுடைய ஊரு ஜூவா கொலைகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.