வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் அனைவரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை பிரஜைகள், இரட்டை குடியுரிமைகளைக் கொண்டோர், சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் இராஜதந்திர பணியாளர்கள் உட்பட இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டுமென்று இருந்த சட்டம் கடந்த பெப்ரவரி மாதத்தில் திருத்தப்பட்டு தனிமைப்படுத்தல் காலம் 7 தொடக்கம் 10 நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது நாட்டில் கொவிட் தொற்று நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில் மீண்டும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் காலத்தை அறிவிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கையெடுத்துள்ளனர்.