November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் பரவல்: இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டன!

Lockdown or Curfew Common Image

இலங்கையில் இன்று காலை முதல் மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளளன.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொலமுன்ன மற்றும் மாம்பே மேற்கு கிராம சேவகர் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தின் மஹபாகே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எலபிட்டிவல நவ மஹர கிராமம் மற்றும் மகுல் பொகுன கிராமத்தின் மகுல் பொகுன வீதி கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காலி மாவட்டத்தின் இமதுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திக்கும்புர கிராம சேவகர் பிரிவு மற்றும் அஹங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அட்டானிகத கிராம ​சேவகர் பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சன்னஸ்கம, தொட்டகஸ்வின்ன மற்றும் கொடகம கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஹம்பாந்தோட்ட மாவட்டத்தின் சூரியவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரியவெவ நகர் கிராம சேவகர் பிரிவு, கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடபொத்த மற்றும் கெந்தாவ கிராம சேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரதேசங்களில் கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.