January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிப்பு!

இலங்கையில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் தினமும் மாலை 6 மணியுடன் மூட வேண்டுமென்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தத் தீர்மானனத்தை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வழமையாக மதுபான விற்பனை நிலையங்கள் முற்பகல் 9 மணி முதல் இரவு 9 மணி வரையில் திறக்கப்பட்டிருக்கும்.

எனினும் அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானத்திற்கமைய மறு அறிவித்தல் வரையில் அவை முற்பகல் 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலேயே திறந்திருக்க முடியும்.