February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எதிர்க்கட்சியின் உதவிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயார்’

நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி உள்ளிட்ட  எந்த ஒரு தரப்பும் தமது செல்வாக்கை பயன்படுத்தி  பெற்றுக்கொடுக்கும் உதவிகளை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஒன்றறை ஆண்டாக நாடு கொரோனா நெருக்கடியை எதிர்கொண்டுவரும் நிலையில், இதுவரை எதிர்க்கட்சி எந்த ஒரு வெளிநாட்டு உதவியையும் பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் தற்போது எதிர்க்கட்சி தமது செல்வாக்கை பயன்படுத்தி வெளிநாட்டு உதவிகளை  பெற்றுக்கொடுக்குமானால் அதனை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.

எதிர்க்கட்சியினர் சர்வ கட்சி மாநாட்டை நடத்தக் கோரியுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கொரோனா தொற்று தொடக்கத்தில் இரண்டு முறை சர்வ கட்சி மாநாடு நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்த கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து முடிவு எடுக்கும் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில மேலும் கூறினார்.