இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த திட்டத்திற்கு ‘எதிர்க்கட்சியில் இருந்து சுவாசம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் சுகாதார வசதிகள் குறைவடைந்து வருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி மருத்துவமனைகளுக்கு சுகாதார உபகரணங்களை வழங்கி வந்ததாகவும், அதன் புதியதோர் திட்டமே இன்று ஆரம்பிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.