May 4, 2025 10:56:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கிராம சேவகர் பிரிவுகளை முடக்குவதால் கொரோனா பரவலைத் தடுக்க முடியாது’: மருத்துவ நிபுணர்கள் சங்கம்

இலங்கையில் கிராம சேவகர் பிரிவுகளை முடக்குவதால் கொரோனா பரவலை தடுக்கவோ, பொருளாதார நடவடிக்கைகளைப் பாதுகாக்கவோ முடியாது என்று மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவ நிபுணர்கள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.

உடனடியாக மாவட்டங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறித்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையின் கொரோனா தடுப்பு மூலோபாயங்களை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய கட்டத்தை அடைந்துள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேவையான முன்னேற்பாடுகளை எடுக்கத் தவறும் போது, நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என்றும் எதிர்வரும் வாரங்களில் ஒரே நாளில் 10 ஆயிரம் நோயாளர்கள் பதிவாகக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.