
இலங்கையின் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கும் கொரிய தூதுவர் சங்துஷ் வூன்ஜின் ஜியோன்கிக்கும் இடையேயான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான சட்ட தொடர்புகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், அரச சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன தெரிவித்தார்.
இதனிடையே, உயர்தர பாடத்திட்டத்தில் கொரியன் மொழியை வெளிநாட்டு மொழியாக சேர்க்க முடிவு செய்துள்ளதாக கொரிய தூதரகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023 இல் க.பொ.த. மேம்பட்ட நிலை தேர்வுக்கு அமரும் மாணவர்கள் கொரிய மொழியைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டு முதல் கல்விப் பொதுத்தராதர உயர்தர பாடத்திட்டதில் வெளிநாட்டு மொழி தெரிவுகளில் கொரிய மொழியை சேர்ப்பதற்கு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுடனான சந்திப்பின்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக கொரிய தூதுவர் சங்துஷ் வூன்ஜின் ஜியோன்கி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இந்த ஆண்டு முதல் உயர்தரத்தில் கொரிய மொழியை தெரிவு செய்து பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இலங்கையர்களுக்கு கொரிய நாட்டில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரிய மொழியை உயர்தர பாடத்திட்டத்தில் உள்வாங்குவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.