
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 20,710 இலங்கையர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (10) மாத்திரம் 17, 541 இலங்கையர்கள் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்தியுள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.அதேபோல்,இலங்கையர்களை தவிர 5,300 சீன நாட்டவர்களும் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கிய நிலையில்,இலங்கையர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி மே 08 ஆம் திகதி முதல் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.