May 4, 2025 9:44:00

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாணங்களுக்கு இடையிலான அரச பஸ் சேவைகள் இடை நிறுத்தம்!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை அமுலானதும் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளை இடை நிறுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பயணக் கட்டுப்பாடு அமுலானதும் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளை நிறுத்த தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.