விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்தார்.
எனினும் கொவிட் -19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் வழிகாட்டலுக்கு ஏற்ப எதிர்வரும் தினங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்துவரும் பணி தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் அரசாங்க தனிமைப்படுத்தல் மையங்களைப் போலவே தொடரும் அதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் பணியாற்றுவதற்கு விமான நிலைய ஊழியர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரணதுங்க மேலும் கூறினார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கை தொழிலாளர்களிடையே கொவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அவர்களிடமிருந்து இதுவரை கொரோனா கொத்தணிகள் உருவாகவில்லை எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்க சுட்டிக்காட்டினார்.