
இலங்கையில் பரவும் கொவிட் தொற்றுப் பரவலை கருத்திற் கொண்டு நோன்புப் பெருநாள் அன்று பள்ளிவாசல்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் அன்றைய தினம் தொழுகைகளை வீடுகளில் இருந்து நடத்துமாறு அந்தத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு பள்ளிவாசல்களில் கூட்டுச் செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமென்று வக்பு சபை உத்தரவிட்டுள்ளதால் நோன்புப் பெருநாளில் அனைத்து பள்ளிவாசல்களையும் மூடுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.