கிழக்கு மாகாணத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா மூன்றாம் அலை தொடங்கியது முதல் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், உடனடியாக அமுலாகும் வகையில் கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்களுக்கு இடையே பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறும் பாதுகாப்புப் படையினருக்கும் ஆளுநர் உத்தரவிட்டார்.
மேலும், மாலை 6 மணிக்குப் பிறகு மக்கள் நகரங்களுக்குள் பிவேசிக்காத வகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மாலை 6 மணிக்கு மூடுமாறு ஆளுநர் கோரியுள்ளார்.
அத்தோடு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் பாதுகாப்புப் படையினரை வலியுறுத்தியுள்ளார்.