May 29, 2025 22:06:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கல்வியியற் கல்லூரி விடுதிகளிலிருந்து மாணவர்கள் வெளியேற்றம்

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விடுதிகளில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த 375 ஆசிரிய மாணவர்கள் அவர்களது சொந்த வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கல்லூரியின் மாணவர் விடுதி தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்படவுள்ளதனால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களையும் தனித்தனியான பேருந்தில்  சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை கல்லூரி நிர்வாகம் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

இன்று காலையில் எட்டு பேருந்துகளில், 71 ஆண் ஆசிரிய மாணவர்களும் 304 பெண் ஆசிரிய மாணவர்களும் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி வளாகமும் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்படவுள்ளதனால், அங்கிருந்த மாணவர்கள் நேற்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.