(Image by Gerd Altmann from Pixabay)
தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் ஊழியர் சேம நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளது.
இதன் மூலம் அரச ஊழியர்களுக்கு வழங்குவது போன்று மாதாந்த கொடுப்பனவாக ஊழியர் சேம நிதியை வழங்குவதற்கு இதன் மூலம் நடவடிக்கை எக்கப்படவுள்ளது.
எனினும் இந்த திட்டம் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்தில் மட்டுமே உள்ளதாகவும் திட்டவட்டமான முடிவு எடுக்கப்படவில்லை எனவும் நிதி அமைச்சின் மேலதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அத்தோடு இந்த திட்டத்திற்கு அரசின் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் துறையினருக்கு ஓய்வூதிய திட்டத்தை உருவாக்கும் முன்மொழிவு கடந்த அரசாங்கத்தினால் 2011 ஆண்டு கொண்டுவரப்பட்டது. எனினும் அதற்கு எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து கைவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து பல முறை பேச்சுக்கள் எழுந்த போதும் இதுவரை எந்த ஒரு தீர்மானமும் எட்டப்படவில்லை.