குவைத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் சடலம் நேற்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தப் பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு குவைத்துக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி இந்தப் பெண் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவரினால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மஹவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண்ணின் சடலம் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை இன்று (திங்கட் கிழமை) நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நீதிவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நீர்கொழும்பு பொது மயானத்தில் குறித்த பணிப்பெண்ணின் உடலை அடக்கம் செய்யுமாறு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, கட்டுநாயக்க பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.