இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்க கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (எக்ஸிம்) முன்வந்துள்ளது.
கொரிய நிதி மற்றும் மூலோபாய அமைச்சின் கீழ் இயங்கும் எக்ஸிம் வங்கியின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் ஊடாக கொரிய அரசு இந்த நிதியை இலங்கைக்கு வழங்குகின்றது.
இதற்கான உடன்படிக்கையில் கொரிய எக்ஸிம் வங்கி கைச்சாத்திட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த உடன்படிக்கையில் இலங்கை அரசு சார்பாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவும் கொரிய குடியரசு சார்பாக கொரியத் தூதுவர் வூன்ஜின் இன்று (மே 10) கையெழுத்திட்டனர்.
சலுகைக் கடனை சுமார் 0.15% -0.20% வரையான வட்டி விகிதத்தில் கொரிய அரசு வழங்க முன்வந்துள்ளது.
அத்தோடு, கடனை மீளச் செலுத்துவதற்கான காலம் 40 வருடமாகவும் அவகாச காலம் 10 வருடமாகவும் கொரிய அரசு அறிவித்துள்ளது.
கொரிய எக்ஸிம் வங்கியானது பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் ஊடாக கொழும்பு – காலி வீதி அபிவிருத்திக்காக 1990 இல் முதன் முதலில் நிதி ஒதுக்கீடு செய்தது.