File Photo
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துச் செல்லும் நிலையில் நோயாளர்களுக்கு தேவையான ஒக்ஸிஜன் மற்றும் சுவாச உதவி உபகரணங்களை சீனாவிடமிருந்து நன்கொடையாக பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இது தொடர்பான கோரிக்கை கடிதமொன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பிரதமர் அலுவலகத்தினால் சீனத் தூதுவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாகவும், கூடிய விரைவில் அவற்றை இலங்கைக்கு வழங்கி வைக்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் சீனத் தூதரகம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது பல்வேறு நாடுகள் சீனாவிடமிருந்து மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்காக கோரிக்கைகளை விடுத்து வருவதாகவும், இந்த விடயத்தில் சீன அரசாங்கம் இலங்கை பிரதமரின் கோரிக்கைக்கு முன்னிலை கொடுத்து நடந்து கொள்ளும் என்று தூதரக பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.