தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் பொது போக்குவரத்து சேவைகளை கண்காணிக்கும் சிறப்பு நடவடிக்கை இன்று (திங்கட் கிழமை)முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹான தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறும் அனைத்து சாரதிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி,பேருந்துகள், முச்சக்கர வண்டி சாரதிகள் பொது போக்குவரத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
பொதுப் போக்குவரத்து தொடர்பாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, பொது போக்குவரத்து பரிந்துரைகள் குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹான தெரிவித்துள்ளார்.