January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையில் மேலும் 5 மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி கம்பஹா மாவட்டத்தில் மஹர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எடிகெஹெல்கல்ல மேற்கு கிராம சேவகர் பிரிவு, கட்டானை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேசி -சில்வா கிராம கிராம சேவகர் பிரிவு, கதிரான வடக்கு கிராம சேவகர் பிரிவை சேர்ந்த எடபகஹாவத்த கிராமம், கதிரான தெற்கு கிராம சேவகர் பிரிவை சேர்ந்த பேஷகர்ம கிராமம் ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சேதவத்தை கிராம சேவகர் பிரிவை சேர்ந்த மஹபமுனுகம பிரிவு, குன்ஜகஹவத்த கிராம சேவகர் பிரிவை சேர்ந்த 44 ஆவது லேன், நில்சிறி கிராம கிராம சேவகர் பிரிவை சேர்ந்த 3 ஆவது மற்றும் 7 ஆவது லேன் ஆகிய பிரதேசங்களும் தனிமைமப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவை சேர்ந்த நவமெதகம பிரிவு, பக்மீதெனிய கிராம சேவகர் பிரிவை சேர்ந்த ரனஹெலகம பிரிவு, சேருபிடிய கிராம சேவகர் பிரிவை சேர்ந்த சேருபிடிய உப பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அங்கம்மன 182 கிராம சேவகர் பிரிவு, களுத்துறை மாவட்டத்தில் மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பலன்னொருவ 604 கிராம சேவகர் பிரிவு, கொரலஹிம 604 ஏ கிராம சேவகர் பிரிவு, கும்புக மேற்கு 607 ஏ கிராம சேவகர் பிரிவு, ஹொரணை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நர்த்தனகல 606 சி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொனராகலை மாவட்டத்தில் மொனராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,போஹிடிய கிராம கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.