இலங்கையில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களை தொழிலுக்கு அழைப்பது தொடர்பில் புதிய வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிருபம் ஒன்று நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்பட உள்ளது.
இதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன், அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கர்ப்பிணிப் பெண் ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை தவிர்க்குமாறும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அண்மையில் அரசு ஊழியர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள், அதாவது மாதத்திற்கு எட்டு நாட்கள் கடமைக்கு செல்வது போதுமானது என சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.