தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் மேலும் 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதுவரையான காலப்பகுதியில் 6,965 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, மேல் மாகாணத்தில் நேற்று (சனிக்கிழமை)முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 657 விற்பனையாளர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுள் தெரிவு செய்யப்பட்ட 114 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.