இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவரல் தீவிரமடைந்துள்ள நிலையில் மாகாண மட்டத்தில் அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், ஒன்பது மாகாணங்களுக்கும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து மாகாணங்களும் சென்று கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தேவையான வசதிகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 105 கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையங்களில் 19,000 இற்கு அதிகமான கட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளனஃ
இதனிடையே, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் தொடர்ச்சியாக அதிகரிப்பு ஏற்பட்டு வருவதால் அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளிலும் ஒரு விடுதியை கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக தயார்படுத்தவும் சுகாதார அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது.