November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Lockdown or Curfew Common Image

கொவிட் தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மேலும் 21 கிராம சேவகர் பிரிவுகளை இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, மாவட்டத்தின் ரக்வான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தொலோ கந்த, ரம்புக, கத்லான, தனபெல, இம்புக்கந்த மற்றும் பொத்துபிட்டிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பனாகொல, குபுக்மிட்டிய, குடாவ, தெல்கொட கிழக்கு, தெல்கொட மேற்கு, தேவாலகம, கலஹாகம, கொஸ்வத்த, கபஸ்ஸர கந்த, வதுராவ, வெம்பிட்டியகொட, வெத்தாகல கிழக்கு, வெத்தாகல மேற்கு மற்றும் தவுலகலகம கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சென்கூம்ஸ் தோட்ட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை களுத்துறை மாவட்டத்தின் பானந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குஊட்பட்ட நாரம்பிட்டிய கிராம சேவகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் இன்று காலை முதல் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.